கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.
மாலை திகழும் திரு மார்பை உடையவனே, வலன் என்கிற அசுரனை
ஜெயித்து, இந்திரனின் வாசஸ்தலமாகிய அமராவதிக்கு பகைவனாகிய
சூரபத்மா என்கிற மா மரம் அழிந்துபோக வேலைப் பிரயோகித்தவனே,
கரிய நிறத்தை உடைய எருமை வாகனத்தில் ஏறிவரும் எமன் எனது
உயிரைக் கொள்ளை கொள்ள வந்தால் அக்கணமே தோகையை
உடைய அழகிய குதிரையாகிய மயில் வாகனத்தில் வந்து தோன்றி
அருள வேண்டும்.
No comments:
Post a Comment