Friday, 6 July 2018

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.


வேயுறு தோளிபங்கன்


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.


நாளென் செயும்வினை தானென் செயும்


நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

நற்றுணை யாவது நமச்சி வாயவே

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே


ராகவேந்த்ராய

பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷய
நமதாம் காமதேனவே


இராம னுசன் சரணாரவிந்தம்


பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த

பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்

தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்

நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே


ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து ..


ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.


உலகமுண்ட பெருவாயா


உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே
குல தொல் லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே